அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் திருக்கோவில்
 
ஸ்ரீ சற்குரு அதிஷ்டானம்

அரசு பதிவு- C – 1419(81/94)

தவத்திரு நீலமலை சித்தர் ஸ்வாமிகள்
 
7/164, தடாகம் சாலை, கணுவாய், கோவை - 641108
தமிழ் நாடு, தென் இந்தியா.
ENGLISH / हिन्दी
 
 
2014 அமாவாசை பூஜைகள்
 
 
தேதி
நாள்
01-ஜன 2014புதன்
30-ஜன 2014வியாழன்
01-மார்ச் 2014சனி
30-மார்ச் 2014ஞாயிறு
28-ஏப்ரல் 2014திங்கள்
28-மே 2014 புதன்
26-ஜூன் 2014வியாழன்
26-ஜூ'ல 2014 சனி
25-ஆக் 2014 திங்கள்
23-செப் 2014 செவ்வாய்
23-அக் 2014 வியாழன்
22-நவ 2014 சனி
21-டிசம் 2014 ஞாயிறு
 
நீலமலை சித்தர் 
சுவாமி புகைப்படங்கள்

 
வீடியோ கேலரி
 
பட தொகுப்பு

 
 
அன்புடையீர்,

கோவை மாவட்டம் ஆனைகட்டி செல்லும் சாலையில் கோவையிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சற்குரு அதிஷ்டானம் ஜீவ சமாதி ஆகும். இப்பீடத்தில் தான் அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னையின் அருள் நேரில் வந்து தரிசித்த மக்களுக்குத் தெரியும். உங்களுடைய கஷ்டம், நவகிரக தோஷம், பில்லி,சூனியம், செய்வினை தோஷம், எதிரிகளால் ஏற்படும் தொழில் வியாபார நஷ்டம், சத்துருக்களின் கண் திருஷ்டி தோஷம், மறைந்த பித்ருகளின் பிரேத சாப மூலமாக திருமணத் தடங்கல், சந்தான தோஷம், கணவன் மனைவி பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், மது பழக்கம் மறக்கவும், நினைத்த காரியம் நடக்கவும் அன்னையை வழிபட்டு பூசணிக்காய் பலி கொடுக்க அன்னையின் அருளால் அனைத்து கஷ்டங்களும் தீரும்.

இந்த ஆலயம் பிரார்த்தனை ஸ்தலமாகும். ஜாதி, மத பேதமின்றி அனைவரும் வழிபடும் புனித ஸ்தலமாகும். அன்னையின் அருள் வேண்டி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரியிலிருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து அமாவாசை அன்று அம்மனின் அருள் பெற்றுச் செல்கிறார்கள்.

அனைத்து பாவங்களையும் தீர்க்கும் வெற்றிவேலன்

இங்கு அருள்பாலிக்கும் ஞானபண்டிதனாகிய ஸ்ரீபாலதண்டாயுதபாணி சுவாமியை வந்து வழிபட்ட மக்களுக்கு வினை தீர்வது வெற்றி அம்சமாகும்.சித்த பிரம்மை,வாத நோய்,இளம்பிள்ளை வாதம்,மனநோய் மற்றும் தீராத நோய்கள் உள்ள மக்கள் திருநீரும் வேப்பெண்ணையும் கொண்டு வந்து ஆண்டவருக்கு அபிஷேகம் செய்து திருநீரை உட்கொண்டும் மேலே பூசியும் நலம் பெறுதல் அற்புதக் காட்சியாகும்.சித்தபிரம்மை,பைத்தியம் உள்ள மக்கள் 12 நாட்கள் தங்கி வழிபாடு செய்ய வேண்டும்.வழிபாட்டினாலும், சுவாமிகள் கொடுக்கும் மருந்தினாலும் நோய்கள் தீர்ந்து குணமளிப்பதை நேரில் காணலாம்.

மாயை அளிக்கும் மன்னவன் மது குடிப்பதை மறக்க

மதுவுக்கு அடிமையாகி கஷ்டப்படும் மக்கள் இங்கு வந்து நீலமலை சித்தர் சுவாமிகளின் கையினால் யாக விபூதி மருந்தும் பெற்று அவர்கள் குடியை மறந்து குடும்பத்துடன் வணங்கிச் செல்வது மிகவும் சிறப்பாக அம்சமாகும்.ஆயிரக்கணக்கானவர்கள் மது பழக்கத்திலிருந்து விடுபட்டு உள்ளனர்.

நியாயம் வழங்கும் நீதி தேவன்

கணவன்,மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து போனவர்கள் ஒன்று சேரவும்,நம்பிக்கையின் பேரில் பிறரிடம் பொருள் பணம் கொடுத்து மோசம் போனவர்களும் பகைவர்களால் துன்பப் படுபவர்களுக்கும், குடும்பத்தொல்லை,குடும்பகஷ்டம் உள்ளவர்களும் படித்து வேலையில்லாத இளைஞர்கள் வழக்குகளில் வெற்றி பெறவும்,எழுத்து மூலமாக அவர்களுடைய குறைகளை ஏழுதி நீதிமன்றத்தில் நீதி கேட்பது போல் வெற்றி வேலனின் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டு அவர்களின் நியாயமான வேண்டுகோளை வேப்ப மரத்தில் கட்ட வேண்டும் வேண்டுகோளை ஏற்று அன்னை அருள்பாலித்து அனுகிரகம் செய்கிறாள்.அவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

கண் கொடுத்து காக்கும் காவல் தெய்வம்

குபேர திசை நோக்கி வடக்கு நோக்கி அன்னை அருள்பாளிக்கிறார்.பக்தர்களுக்கு கஷ்டங்கள் தீரும்,ஆபத்துகள் வரும்போது அன்னை அரவ ரூபத்தில்(பாம்பு உருவில்) தோன்றி ஆபத்துகளை நீக்கி அருள்பாலிப்பதை மக்கள் இங்கு வந்து தெரிவிப்பதும் நேரில் வந்த மக்களுக்கு தெரியும். திருமணமாகாத பெண்களுக்கு தேவிக்கு அபிஷேகம் செய்த மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு எலுமிச்சங்கனியும்,தயிரும்,வேப்பிலையும்,வில்வமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.அப்படிவரம் வாங்கிச் சென்ற மக்கள் குழந்தையுடன் குடும்பத்துடன் வந்து பெயர் வைத்து முடிகாணிக்கை செலுத்திச் செல்வதும் சிறப்பு அம்சமாகும்.

மக்களுக்கு வேண்டிய தர்மப் பணிகள் அன்னையின் அருளால் ஸ்வாமிகள் மூலம் நடந்துவருகிறது.அமாவாசை அன்னதானம் மற்றும் விஷேச பூஜைகள் அன்னையின் அருளால் நடந்துவருகிறது.ஸ்வாமிகள் அன்னையின் அருளால் தீராத வியாதிகளை சித்த வைத்திய முறைகளாலும், உயர்ந்த மூலிகைகளாலும் தீர்ந்து அதில் அவர்கள் விருப்பப்பட்டு அளிக்கும் சன்மானங்களைக் கொண்டு தர்மப்பணி செய்து வருகிறார்.ஜாதி,மத,பேதமின்றி அனைத்து மக்களுக்கும் அருள் வழங்கும் ஒரு புனித ஸ்தலமாகும் இங்கு கிடைக்கும் யாக விபுதி மிகவும் புனிதமாகும்.சுவாமிகளின் தியானம் தவமகிமையினாலும் இங்கு 51 சக்தி பீஜங்கள் சுவாமிகள் ஸ்தாபித்து அதில் அன்னையை அமர்த்தி உள்ளார்கள்.எனவே இங்கு வழிபட்ட மக்களுக்கு 51 சக்தி கோவில்களில் வழிபட்ட பலன்களும்,21 சிவாலயங்களில் வழிபட்ட பலனும் இந்த ஆலயத்தில் வழிபடும் பக்தர்களுக்கு கிடைக்கிறது.