அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் திருக்கோவில்
 
ஸ்ரீ சற்குரு அதிஷ்டானம்

அரசு பதிவு- C – 1419(81/94)

தவத்திரு நீலமலை சித்தர் ஸ்வாமிகள்

 
7/164, தடாகம் சாலை, கணுவாய், கோவை - 641108
தமிழ் நாடு, தென் இந்தியா.
ENGLISH / हिन्दी
 
 
2014 அமாவாசை பூஜைகள்
 
 
தேதி
நாள்
01-ஜன 2014புதன்
30-ஜன 2014வியாழன்
01-மார்ச் 2014சனி
30-மார்ச் 2014ஞாயிறு
28-ஏப்ரல் 2014திங்கள்
28-மே 2014 புதன்
26-ஜூன் 2014வியாழன்
26-ஜூ'ல 2014 சனி
25-ஆக் 2014 திங்கள்
23-செப் 2014 செவ்வாய்
23-அக் 2014 வியாழன்
22-நவ 2014 சனி
21-டிசம் 2014 ஞாயிறு
 
நீலமலை சித்தர் 
சுவாமி புகைப்படங்கள்

 
வீடியோ கேலரி
 
பட தொகுப்பு

 
 
பூஜைகள்:
  • இராகு கால துர்கா பூஜை
  • செவ்வாய் ராகுகால பூஜை
  • மது குடிப்பதை மறக்க
  • திருமணத்தடை நீக்கும் பூஜை
  • வினை தீர்க்கும் வெற்றி வேலன் பூஜை
  • அன்ன அபிஷேக அமாவாசை பூஜை
 
துன்பத்தை நீக்கும் துர்க்கை அம்மன் இராகு கால துர்க்கா பூஜை இங்கு வழிபாட்டில் சிறந்ததாகும்

திருமணத்தடை, சர்ப்பதோஷம், செவ்வாய் நவகிரக தோஷம் நீங்கவும், சந்தான பாக்கியம் உண்டாகவும், ஆகாரம் உட்கொள்ளாமல் விரதத்துடன் இராகு காலங்களில் வெள்ளிக்கிழமை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் 9 வாரங்கள் எலுமிச்சங்கனி தீபம் ஏற்றினால் அன்னை அருளால் மேலே குறிப்பிட்ட குறைகள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும்.

செவ்வாய்கிழமை இராகு கால பூஜை

மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை இராகு காலம் மந்திர தோஷங்கள், செய்வினை தோஷங்களும், வழக்கில் வெற்றியடையவும், தீராத வியாதிகள் தீரவும் தனிஷ்டா பஞ்சமியில் இறந்தவர்கள் தோஷம் நீங்கவும், பேய் பிசாசுகளின் துஷ்ட சக்திகளினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கவும், குழந்தைகளுக்கு பாலகிரி தோஷம் நீங்கவும், செவ்வாய் கிழமை தீபம் ஏற்றி வழிபாடு செய்த மக்களுக்கு அன்னையின் அருளால் மேலே குறிப்பிட்ட குறைபாடுகளும் நீங்கி நன்மை உண்டாகும்.

வறுமை நீங்கும் பெளர்ணமி பூஜையின் சிறப்பு

குடும்பத்தில் கஷ்டப்படும் மக்கள் முன்னேற வேண்டி இங்கு வரும் பக்தர்களை பெளர்ணமி பூஜை நோன்பு எடுத்துக் கொள்ளும்படி அன்னை ஆணையிட்டால் தாய்மார்கள் விரதத்துடன் குத்து விளக்கு கொண்டு வந்து பெளர்ணமி பூஜையில் வைத்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து பூஜை நிறைவேற்றியவுடன் வீட்டிற்குச் சென்று வீட்டில் நெய் தீபம் ஏற்ற வறுமை நீங்கி சுகஷேமம் உண்டாகும்.